என் மலர்
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பாம்பாட்டிகளிடம் குறைகளை கேட்டறிந்த பிரியங்கா
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா, பின்னர் அங்கு வசிக்கும் பாம்பாட்டிகளிடம் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #Priyanka
ரேபரேலி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 4 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, இன்று சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் வசிக்கும் பாம்பாட்டிகளுடன் கலந்துரையாடினார். இதில் அவர்களது அன்றாட தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளை கையில் எடுத்துப் பார்த்தும், தனது கால்களுக்கு கீழ் இருக்கும் பாம்பை எடுத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சிறிதும் பயமின்றி கூடையில் இருந்த பாம்புகளை சகஜமாக தொட்டு பார்த்தபடியே பாம்பாட்டிகளிடம் உரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறுகையில், ‘பாஜக, காங்கிரஸின் கருத்துகள் தேர்தலுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.
அரசியலில் பாஜக தான் எங்கள் எதிரி. ஒருபோதும் பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாக நாங்கள் விடமாட்டோம். ஏனென்றால் வலிமையான, உறுதியான வேட்பாளர்களை நாங்கள் கொண்டுள்ளோம். மேலும் கடுமையாக போராடுவோம்’ என கூறினார். #Priyanka
Next Story