search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஆயுள் தண்டனை
    X

    கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஆயுள் தண்டனை

    பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.#AsaramBapu #NarayanSai
    சூரத்:

    சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி ஆசாராம் பாபு மற்றும் நாராயணன் சாய் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பான வழக்கை விசாரித்த சூரத் அமர்வு நீதிமன்றம், ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என கடந்த 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 



    ஆசாராம் பாபு

    அதன்படி நாராயணன் சாய்க்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக இன்று வாதம் நடைபெற்றது. இந்த வாதத்தின் முடிவில், குற்றவாளி நாராயணன் சாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே வெவ்வேறு கற்பழிப்பு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #AsaramBapu #NarayanSai
    Next Story
    ×