search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இழுபறி முடிந்தது - சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி
    X

    இழுபறி முடிந்தது - சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி

    பாராளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அக்கட்சியின் டெல்லில் தலைமை அறிவித்துள்ளது. #KartiChidambaram #SivagangaLSpolls #LSpolls
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் (தமிழகம்-9, புதுச்சேரி-1) காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக, இன்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ‘ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளார். 

    அதனால் இந்தியா முழுவதும் சிவகங்கை உள்பட 40 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை’ என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மேலும் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இன்று மாலை வெளியிட்டது. அதில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KartiChidambaram #SivagangaLSpolls #LSpolls
    Next Story
    ×