என் மலர்
செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: ஐதராபாத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அசாதுதீன் ஒவைசி
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat
ஐதராபாத்:
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரான அசாதுதீன் ஒவைசி கடந்த 2004 முதல் 15 ஆண்டுகளாக ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இதே தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட தீர்மானித்த ஒவைசி இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘வறுமையின் பிடியில் சிக்கி நலிந்த நிலையில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் தேசிய குரலாக இந்த ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி காலகாலமாக இருந்து வந்துள்ளது. இது இனியும் தொடரும்’ என குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் ஒவைசிக்கு ஆதரவு அளிப்போம் என தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat
Next Story