என் மலர்

  செய்திகள்

  மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி: காங்கிரசுக்கு பின்னடைவு
  X

  மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி: காங்கிரசுக்கு பின்னடைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty
  மும்பை :

  உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மராட்டியத்தில் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து மராட்டியத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது:-

  கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறோம். அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுப்போம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

  இ்வ்வாறு அவர் கூறினார்.  இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுரேஜ் சக்காரே கூறுகையில், ‘‘வருகிற 20-ந்தேதிக்குள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். விதர்பா, மரத்வாடா மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 16 லட்சம் வாக்குகளையும், 2014-ல் நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும் பெற்று உள்ளோம். எங்கள் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

  பிரகாஷ் அம்பேத்கர் தனித்து போட்டியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கொண்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

  பகுஜன் சமாஜ் கட்சிக்கு விதர்பா மண்டலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் அந்த கட்சி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்குகளை பெற்று இருந்தது. இதேபோல முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பிவண்டி, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samajwadi #BahujanSamajParty
  Next Story
  ×