என் மலர்

  செய்திகள்

  மகன் வருண்காந்திக்காக பிலிபிட் தொகுதியை விட்டு கொடுக்கும் மேனகா
  X

  மகன் வருண்காந்திக்காக பிலிபிட் தொகுதியை விட்டு கொடுக்கும் மேனகா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அமைச்சர் மேனகா காந்தி எம்.பி.யாக உள்ள பிலிபிட் மக்களவை தொகுதியை, தனது மகன் வருண் காந்திக்கு விட்டு கொடுக்கிறார். #VarunGandhi #ManekaGandhi
  புதுடெல்லி:

  மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

  அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

  தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.

  வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார்.

  இதன் காரணமாகவே மேனகா காந்தி தான் பலமுறை வெற்றி பெற்ற பிலிபிட் தொகுதியை வருணுக்கு விட்டு கொடுக்கிறார்.  மேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

  2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார். #VarunGandhi #ManekaGandhi
  Next Story
  ×