என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்
  X

  பாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலையடுத்து அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க நாளை காலை டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
  புதுடெல்லி:

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

  இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.  மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இதைதொடர்ந்து, புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை காலை 11 மணியளவில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

  பாராளுமன்றத்தில் உள்ள நூலக அரங்கில் நடைபெறும் நாளையை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
  Next Story
  ×