என் மலர்

  செய்திகள்

  ரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்
  X

  ரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale
  புதுடெல்லி:

  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

  மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. #RafaleIssue #LokSabha #CAGonRafale
  Next Story
  ×