search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
    X

    பட்டாசு தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

    பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #FireWorks #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் விதித்து அனுமதி வழங்கியதுடன், பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கியது.



    இதையடுத்து பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் சில விளக்கங்கள் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மூல மனுதாரர் தரப்பு வக்கீல், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #FireWorks #SupremeCourt
    Next Story
    ×