search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் வருமானம் 11 ஆண்டுகளுக்கு பிறகு சரிந்தது
    X

    காங்கிரஸ் கட்சியின் வருமானம் 11 ஆண்டுகளுக்கு பிறகு சரிந்தது

    கடந்த 11 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுதான் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Congress
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும்.

    அதன்படி 2017-18ம் ஆண்டுக்கான வருமான விவரத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் 2017-18ம் ஆண்டு ரூ.199 கோடி வருமானம் கிடைத்து இருப்பதாக கூறி உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு அதிக வருமானம் இருந்தது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக முதலிடத்தில் காங்கிரஸ் இருந்தது.



    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி வருமானம் பெறுவதில் மிகவும் பின்தங்கி உள்ளது.

    2017-18ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் அன்பளிப்பு தொகையில் வெறும் ரூ. 5 கோடி மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் பா.ஜனதா இத்தகைய வருமானத்தில் ரூ.210 கோடி வரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரசுக்கு கிடைத்து உள்ள வருமானத்தில் கூப்பன்கள் விற்றதன் மூலம் ரூ.110 கோடி கிடைத்து உள்ளது. தலைவர்கள் பங்களிப்பு மூலம் ரூ.32 கோடி வந்துள்ளது.

    வருமானம் குறைந்ததால் சில மாநில கட்சிகளை விட காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. #Congress

    Next Story
    ×