என் மலர்
செய்திகள்

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
அவ்வகையில், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled # Hiranagarsector
Next Story






