என் மலர்

  செய்திகள்

  சபரிமலையில் பெண்கள் தரிசனம் - கேரளாவில் வன்முறை தொடர்பாக 6 ஆயிரம் பேர் கைது
  X

  சபரிமலையில் பெண்கள் தரிசனம் - கேரளாவில் வன்முறை தொடர்பாக 6 ஆயிரம் பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன #Sabarimala
  திருவனந்தபுரம்:

  சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பினர்.

  பக்தர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ம் தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர்.

  50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருவர் சபரிமலையில் தரிசனம் செய்த தகவல் வெளியானதும், கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சபரிமலை கர்மசமிதியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.  இதையொட்டி நடந்த முழு அடைப்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், அலுவலகங்கள், அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்டன.

  கேரளத்தின் தென்பகுதியான நெய்யாற்றின்கரை முதல் வடபகுதியான கண்ணூர் வரை கலவரம் பரவியது. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

  வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 2 ஆயிரத்து 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 894 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 817 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #sabarimala
  Next Story
  ×