search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபுலு வர்மன்
    X
    பாபுலு வர்மன்

    கேரளாவில் வசிக்கும் வங்காளதேச தொழிலாளிக்கு ரூ.65 லட்சம் லாட்டரி பரிசு

    கேரளாவில் வசிக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு லாட்டரி சீட்டு மூலம் ரூ.65 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. #Keralalottery
    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தி பம்பர் பரிசுகளை வழங்கி வருகிறது.

    வங்காளதேசத்தைச் சேர்ந்த பாபுலு வர்மன்(வயது 27) என்பவர் குடும்பத்துடன் கேரள மாநிலம் அடூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் கேரள அரசின் காருண்யா பாக்கிய ஸ்ரீ என்ற லாட்டரியை இவர் வாங்கி இருந்தார். இதில் முதல் பரிசு ரூ.65 லட்சம் இவருக்கு கிடைத்துள்ளது.

    தனக்கு பரிசு விழுந்த விபரத்தை லாட்டரி சீட்டு வாங்கிய கடைக்காரர் மூலம் உறுதி செய்து கொண்ட பாபுலு வர்மன் அந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.

    இது பற்றி பாபுலு வர்மன் கூறியதாவது:-

    நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சொந்தமாக எதுவும் கிடையாது. நான் பல முறை லாட்டரி சீட்டு வாங்கிய போதும் தற்போது தான் பரிசு கிடைத்துள்ளது. இந்த பணம் மூலம் கேரளாவில் சொந்த வீடு வாங்குவேன். இங்கேயே எனது வாழ்க்கையை நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Keralalottery
    Next Story
    ×