என் மலர்

  செய்திகள்

  எம்பிக்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மக்களவை இனி 27-ம் தேதி கூடும்
  X

  எம்பிக்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மக்களவை இனி 27-ம் தேதி கூடும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி பாராளுமன்றம் கூடும். #LokSabhaAdjourned #ChristmasHolidays
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  12 மணிக்கு அவை கூடியபோதும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியிலும் ஜீரோ அவர் பணிகள் நடைபெற்றன. இதில் 5 உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இதுதுவிர பொது கணக்கு குழு மற்றும் இரண்டு நிலைக் குழு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

  ஜீரோ அவர் முடிந்த பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் பேசினார். அப்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெரும்பாலான எம்பிக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக தானும் கடிதம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.  இக்கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்கள் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.

  அதன்பின்னர் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மக்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். இதேபோல் மாநிலங்களவைக்கும் நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaAdjourned #ChristmasHolidays
  Next Story
  ×