search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை
    X

    அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை

    மோடி அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார். #RamdasAthawale
    மும்பை:

    இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே இன்று இங்கு வந்திருந்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்வைத்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்ட்ட அவர் பா.ஜ.க.வுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியர்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.



    வெகு விரைவாக குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என நம்புகிறேன் என இன்றைய பேட்டியின்போது ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார்.

    இதே மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராம்தாஸ் அத்வாலேவை பிரவீன் கோசுவாமி என்பவர் கன்னத்தில் அறைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #15lakh #15lakhinbankaccounts #RamdasAthawale
    Next Story
    ×