என் மலர்

  செய்திகள்

  புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலி - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு
  X

  புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலி - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

  அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பிரிவினைவாதிகள் தொடர்ந்து 3 நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

  இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள ஞாயிற்றுக்கிழமை வார சந்தை மூடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

  என்கவுண்டரை தொடர்ந்து காஷ்மீரில் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் மொபைல் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. பி.எஸ்.என்.எல் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
  Next Story
  ×