என் மலர்

  செய்திகள்

  நல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை - கமல்
  X

  நல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை - கமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் மழையால் சிதிலமடைந்த வீடுகளை புனரமைத்து கட்டித் தந்தது போன்ற நல்ல திட்டங்களை காப்பியடிப்பதில் வெட்கம் இல்லை கமல்ஹாசன் தெரிவித்தார். #Kamalhassan #KeralaRain
  கொச்சி:

  கேரளாவைச் சேர்ந்த டுவென்டி20 என்ற அமைப்பு ‘கடவுள் இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிழக்கம்பள்ளம் என்ற பகுதியில் உள்ள ஒரு காலனியில் சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைத்து கட்டித்தந்துள்ளது.  அந்தத் திட்டத்தின் மூலம் 37 பயனாளர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு வீடு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டுக்கான சாவிகளை வழங்கினார்.

  நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறியதாவது:-

  அரசியல் என்பது ஓர் அர்ப்பணிப்பு. அது தொழில் அல்ல. நானும் டுவென்டி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் சாபு ஜேக்கப்பும் இணைந்து அரசியலில் ஒரு புது மாற்றத்தைக் கொண்டு வருவோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

  என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல. அது மக்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும். ‘கடவுள் இல்லம்’ மிகச் சிறந்த ஒரு திட்டம். நான் இங்கு வந்தது ஒரு விருந்தினராக மட்டும் அல்ல. இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொண்டு இதேபோல தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் சிதிலமடைந்த வீடுகளை சரி செய்வது பற்றி அறிந்து கொள்ளவும்தான்.

  சாபுவின் இந்த திட்டத்தை காப்பி அடிக்க போகிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தவே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #Kamalhassan #KeralaRain
  Next Story
  ×