search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வீரர் பலி
    X

    பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வீரர் பலி

    காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள கலால் என்னுமிடத்தில் உள்ள இந்திய கண்காணிப்பு கோபுரங்கள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய படையினரும் ஆவேசமாக பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் சில நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் கோசாவி கேஷவ் சோம்கீர்
    உயிரிழந்தார்.

    முன்னதாக, இதே ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் வருண் கட்டால் என்ற இந்திய வீரர் உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றிய  தீபக் குமார் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    Next Story
    ×