என் மலர்
செய்திகள்

கேரளாவில் சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரை - எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கேரளாவில் பாஜக சார்பில் 6 நாள் நடைபெற உள்ள சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரையை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். #SabarimalaRathYatra #SabarimalaProtests
காசர்கோடு:
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியபோது, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையானது, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடது சாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும் என்றார். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு பினராயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ரத யாத்திரை, வரும் 13ம்தேதி சபரிமலையை சென்றடைய உள்ளது. #SabarimalaRathYatra #SabarimalaProtests

இந்த நிலையில் கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது. காசர்கோடு மாவட்டம் மாத்தூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Next Story