என் மலர்

  செய்திகள்

  மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மரணம்
  X

  மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம் அடைந்தார். #MadhyaPradeshElections #BJPCandidateDies
  ராஜ்பூர்:

  230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று மரணம் அடைந்தார். தூங்கிக்கொண்டிருந்தபோது அன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  ராஜ்பூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவி சிங். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மரணம் அடைந்ததால் ராஜ்பூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்படும்.  #MadhyaPradeshElections #BJPCandidateDies
  Next Story
  ×