என் மலர்
செய்திகள்

சபரிமலை சன்னிதானம் அருகே முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaSannidhanam
சபரிமலை:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கடந்த மாதம் கோவில் நடை திறந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த முறையும் போராட்டம் நடைபெறலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaSannidhanam

Next Story