search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் நகராட்சி தேர்தலில் பாரமுல்லா மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு
    X

    காஷ்மீர் நகராட்சி தேர்தலில் பாரமுல்லா மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சிகளுக்கு நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட தேர்தலில் இன்று பிற்பகல் நிலவரப்படி பாரமுல்லா மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
     
    பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் இன்று நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பாரமுல்லா மாவட்டத்தில் 59.6 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1% சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 2.5% சதவீதம், ஸ்ரீநகரில் 1.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    Next Story
    ×