என் மலர்

  செய்திகள்

  காதலிக்கு செலவு செய்வதற்காக திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது
  X

  காதலிக்கு செலவு செய்வதற்காக திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், காதலிக்கும் பெண்ணுக்கு செலவு செய்ய பணம் இல்லாத காரணத்தால் திருட்டில் ஈடுபட்டு கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  புதுடெல்லி :

  டெல்லியில் உள்ள பிரபல ஓட்டலில் ஐ.பி.எம் நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 11-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தேவ்யானி ஜெயின் எனும் பெண் கலந்து கொண்டார். அப்போது அவரது கைப்பையில் இருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக தேவ்யானி போலீசில் புகார் அளித்ததால் அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் அவரது பணத்தை திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதை பார்த்தனர். இது குறித்து நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய நபர் அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த கர்வித் ஷானி என்பவர் என கண்டுபிடித்தனர்.

  இதைத்தொடர்ந்து, கர்வித் ஷானியை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூகுள்  நிறுவன ஊழியர் என்பதும், காதலிக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
  Next Story
  ×