என் மலர்
செய்திகள்

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
கவுகாத்தி:
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அசாம் அமைச்சரவையில் தீர்மானம் போடப்பட்டு, வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குனருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
ரீமா தாஸ் இயக்கிய இத்திரைப்படம் ஏற்கனவே இந்தாண்டுக்கான தேசிய விருதினை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
Next Story






