என் மலர்
செய்திகள்

வீடுகளில் மோடி, சவுகான் படம் பதித்த டைல்ஸ்களை நீக்க ம.பி. ஐகோர்ட் உத்தரவு
மத்தியப்பிரதேசத்தில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டிய வீடுகளில் பிரதமர் மோடி, முதல் மந்திரி சவுகான் ஆகியோரின் படங்கள் பதித்த டைல்ஸ்களை நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PMAY #Modi #ShivrajSinghChouhan
போபால்:
அனைவருக்கும் வீடு என்ற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த திட்டத்தின்படி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரது படம் பதித்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த ஆண்டின் இறுதியில் ம.பி.யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள மோடி, சவுகான் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களை அகற்ற வேண்டும் என குவாலியர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டிய வீடுகளில் பிரதமர் மோடி, முதல் மந்திரி சவுகான் ஆகியோரின் படங்கள் பதித்த டைல்ஸ்களை டிசம்பர் 20-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PMAY #Modi #ShivrajSinghChouhan

Next Story