search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள்
    X

    தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள்

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. #CentralGovernment #SupremeCourt

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில் ‘‘ஜெயில் தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 1,581 வழக்குகளில் எத்தனை வழக்குகள் ஒரு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.7.8 கோடி செலவில் 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

    இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறி இருப்பதாவது:-


    எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு எதிரான வழக்கு கைளை விசாரிக்க 12 சிறப்பு கோர்ட்டுகளை அமைப்பது தொடர்பாக 11 மாநிலங்கள் அறிவிக்கைகள் வெளியிட்டு உள்ளன.

    இதன்படி டெல்லியில் 2 சிறப்பு கோர்ட்டுகள், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தனிக் கோர்ட்டுகளையும் அமைக்க உள்ளன.

    இந்த 12 சிறப்பு கோர்ட்டுகளில் 6 செசன்ஸ் நீதிமன்றங்கள் ஆகும். 5 மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கும் சிறப்பு கோர்ட்டு குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    ஒட்டுமொத்த மாநிலமும் இந்த சிறப்பு கோர்ட்டுகளின் அதிகார வரம்புக்குள் வரும்.

    மத்திய அரசு புள்ளி விவரங்களின்படி இந்த சிறப்பு கோர்ட்டுகளுக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட உள்ளன. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1097 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralGovernment #SupremeCourt

    Next Story
    ×