என் மலர்
செய்திகள்

கனமழையால் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்
கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. #IdukkiDam
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய சேதங்களை சந்தித்த கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
2403 அடி உயரமான இடுக்கி அணைக்கு அதிகளவு நீர் வந்ததன் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 9-ம் தேதி அணை திறக்கப்பட்டது.
தற்போது, மழை இல்லாததால் நீர் வரத்தும் குறைந்தது. அணையில் 2391 அடி தண்ணீர் இப்போது உள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story






