search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகமாக வளர்ந்துவரும் இந்திய பொருளாதாராம் - பிரதமர் மோடி பெருமிதம்
    X

    வேகமாக வளர்ந்துவரும் இந்திய பொருளாதாராம் - பிரதமர் மோடி பெருமிதம்

    உலகின் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #pmmodi #Indianeconomy
    புதுடெல்லி:

    ‘முன்னேறு’ (MOVE) என்னும் தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் உலகளாவிய முதல் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    ‘இந்தியா முன்னேறுகிறது. நமது பொருளாதாரம் முன்னேறுகிறது. உலகின் வேகமாக வளர்ந்துவரும்  மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறுகிறது. நமது பெருநகரங்களும், நகரங்களும் முன்னேறுகின்றன.

    நாம் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி வருகிறோம். நமது உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேறுகின்றன. துறைமுகங்கள், ரெயில் பாதைகள், விமான நிலையங்கள், சாலைகள் போன்றவற்றை நாம் அதிவேகமாக அமைத்து வருகிறோம்.

    பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதிகள் அதிமுக்கியமானது. போக்குவரத்துக்கான வசதிகள் மூலமாக பயணம் செய்யும் சிரமங்களும், சரக்கு போக்குவரத்தில் உள்ள இடையூறுகளும் குறைந்து, பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது.

    ஜி.எஸ்.டி. மூலம் நமது சரக்கு போக்குவரத்து மற்றும் பண்டகச்சாலைகளை முறைப்படுத்த முடிகிறது. நமது சரக்குகளும் முன்னேறி கொண்டிருக்கின்றன. நமது சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. தொழில் செய்வதற்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றியுள்ளோம். நமது வாழ்க்கை முன்னேறுகிறது.

    வீடுகள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு, வங்கி கணக்குகள் மற்றும் வங்கிக்கடன்கள் மக்களுக்கு கிடைத்து வருகின்றன' என தனது உரையின்போது மோடி குறிப்பிட்டார்.  #pmmodi #Indianeconomy 
    Next Story
    ×