search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமின் நீட்டிப்பு இல்லை- ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் லாலு
    X

    ஜாமின் நீட்டிப்பு இல்லை- ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் லாலு

    கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று சரண் அடைந்தார். #LaluPrasad #Lalusurrender
    ராஞ்சி:

    பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவரது ஜாமின் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி ஆகஸ்ட் 30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 25-ம் தேதி பாட்னா திரும்பினார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட லாலு, விமானம் மூலம் நேற்று மாலை ராஞ்சி நகரை வந்தடைந்தார். இன்று ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

    இதுபற்றி லாலுவின் வழக்கறிஞர் கூறுகையில், ‘மும்பை ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் டாக்டர்கள் லாலுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவரது உடல்நிலை குறித்து  நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள்’ என்றார். #LaluPrasad #Lalusurrender  
    Next Story
    ×