என் மலர்

  செய்திகள்

  தி.மு.க தலைவராக உள்ள மு.க ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
  X

  தி.மு.க தலைவராக உள்ள மு.க ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க.வின் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ள மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Chidambaram
  புதுடெல்லி:

  திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்துவந்த கருணாநிதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து கட்சியின் தலைவர் பதவிக்கு முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க மூத்த நிர்வாகிகள் முடிவெடுத்தனர்.

  இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட திமுகவின் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மாலை 4 மணி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

  இதனால், போட்டியின்றி ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்க உள்ளதாகவும், நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், போட்டி இன்றி திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய பொருளாளர் துரைமுருகனுக்கும் தனது வாழ்த்துக்களை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Chidambaram
  Next Story
  ×