search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த குழந்தை உடலுக்குள் 2 செ.மீ. நீள ஊசி- ஒரு மாதத்துக்கு பின் அகற்றம்
    X

    பிறந்த குழந்தை உடலுக்குள் 2 செ.மீ. நீள ஊசி- ஒரு மாதத்துக்கு பின் அகற்றம்

    மும்பையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி 2 செ.மீட்டர் நீளத்திற்கு முறிந்து உடலுக்குள் சென்ற நிலையில் ஒரு மாதத்துக்கு பின் அகற்றப்பட்டுள்ளது.
    மும்பை:

    மும்பையில் உள்ள செம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜெய்ராஜ், ஆஸ்தா கெய்க் வாட் இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் ஆஸ்பத்திரியில் வைத்து இடுப்பில் தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போட்ட இடத்தில் குழந்தையின் உடலில் வீக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து குழந்தை கடும் காய்ச்சலால் அவதியுற்றது. எனவே குழந்தையை உள்ளூர் டாக்டரிடம் பெற்றோர் கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர் குழந்தையின் உடலில் தடுப்பூசி போட்ட இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் போன்றவை எடுத்து பார்த்தார். அப்போது எலும்புக்குள் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து மும்பையில் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு இடுப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்பட்ட இடத்தில் ஆபரேசன் நடத்தப்பட்டது. அப்போது இடுப்பு எலும்பு சந்திப்பில் 2 செ.மீட்டர் நீள ஊசி முறிந்த நிலையில் உள்ளேயே தங்கியிருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கவனமாக 2 மணி நேரம் ஆபரேசன் செய்து ஊசியை உடலில் இருந்து அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.

    இதனால் தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி மீது குழந்தையின் பெற்றோர் ஜெய்ராஜ்- ஆஸ்தா கெய்க் வாட் கோபம் அடைந்தனர். ஆனால் அந்த ஆஸ்பத்திரி மீது வழக்கு போடவில்லை.
    Next Story
    ×