என் மலர்

    செய்திகள்

    நான் சுதந்திரமாக செயல்பட ராகுல்காந்தி அனுமதித்துள்ளார்- குமாரசாமி
    X

    நான் சுதந்திரமாக செயல்பட ராகுல்காந்தி அனுமதித்துள்ளார்- குமாரசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நான் சுதந்திரமாக செயல்பட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதித்து இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில வளர்ச்சிக்கு 3 திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதில், முதன்மையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. இதற்காக வடக்கு கர்நாடகாவில் 7 மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். இது தவிர, மேலும் 3 மாவட்டங்களும் அதில் உள்ளது.

    இங்கு பல்வேறு உற்பத்தி தொழில்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம். சீனாவை போல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தொழிலை தொடங்க இருக்கிறோம்.

    இதற்காக வரும் 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    அடுத்ததாக நீர்ப்பாசன திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்த இருக்கிறேன். விவசாயிகள் கடன் தள்ளுபடி இடைக்கால நிவாரணமாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வு ஆகாது.

    விவசாய உற்பத்தி முறைகளை மாற்றி அமைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


    இந்த ஆண்டு கடவுள் கருணையால் நல்ல மழை பெய்துள்ளது. இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல் தமிழக சகோதர, சகோதரிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    இப்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அடுத்த மாத தண்ணீரையும் கொடுக்க தயாராகி வருகிறோம். இதில், எந்த பிரச்சினையும் எழாது. 12, 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு வந்துள்ளது. மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டதற்கு பெரிய காரணங்கள் என்று எதுவும் இல்லை. நான் பொதுவாக எதிலும் உணர்ச்சிவசப்படுபவன். நானும் சாதா ண மனிதன்தான். அந்த வகையில் கண்ணீர் வந்துவிட்டது.

    நான் முதல்-மந்திரி ஆனதற்கு பிறகு டி.வி., ஊடகங்கள் நான் எதை செய்தாலும் அதை எதிர்த்து கருத்துக்கள் கூறுகின்றன. நான் எடுக்கும் கொள்கைகளை மக்களிடம் தவறாக சித்தரித்து காட்டுகின்றன.

    ஏன் அப்படி செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    அவர்கள் யார் என்று சொல்ல முடியாது. நான் எதிர்க்கட்சியினரை சொல்லவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை என்னை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் அவர்களுடைய கடமையாகும். இதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால், சில குறிப்பிட்ட பொதுவான மனிதர்கள் என் மீது தவறான எண்ணத்தை வைத்துள்ளனர். அதுதான் எனது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    இது சம்பந்தமாக எனது குடும்பத்தினர், தொண்டர்கள் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். நான் காங்கிரஸ்காரர்களையும் குறை சொல்லவில்லை. எனது பட்ஜெட்டை பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள். நான் வடக்கு, தெற்கு என்று எந்த பாகுபாடும் பார்க்கவில்லை.


    நாங்கள் காங்கிரசுடன் குறைந்தபட்ச திட்டங்கள் அடிப்படையில் கூட்டணி அமைத்து இருக்கிறோம். காங்கிரஸ் கொண்டு வந்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது முக்கிய பணி ஆகும்.

    என்னை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடும் கருத்துக்கள் என்னை விமர்சிப்பவை அல்ல. அவை அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு வழங்கும் ஆலோசனையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    அவர் என்ன ஆலோசனை வழங்கினாலும் அதை நான் வரவேற்கிறேன். ராகுல்காந்தியை பொருத்த வரை என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். இந்த வி‌ஷயத்தில் நான் அதிர்ஷ்டக்காரன். அவரது பெயரை நான் தவறாக பயன்படுத்தமாட்டேன்.

    மேலும் அவரிடம் மற்ற காங்கிரசாரைப்பற்றி விவாதிக்கவும் நான் விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் எனது ஆட்சியில் தலையிடவில்லை. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை பொருத்த வரையில் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் எழாது. எங்களுக்குள் ஒருமித்த கருத்து உள்ளது.

    தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு வி‌ஷயத்தை பொருத்த வரை நான் ஒரு சாதாரண நபர். அதே நேரத்தில் அனைத்து தலைவர்களும் சேர்ந்து சரியான மாற்று அரசை உருவாக்க வழிகாண வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில், சொந்த நலன்களை மறந்து விட்டு நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடியை நான் 2 முறை சந்தித்தேன். அவர் என்னை அன்பாக வரவேற்றார். எனக்கு பல ஆலோசனைகளையும் வழங்கினார். இதை நான் எனக்கு அளித்த ஊக்குவிப்பாக எடுத்து கொண்டேன்.

    அவர் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டது தொடர்பான வி‌ஷயத்தில் அவர் என்னை சகோதரனாக அல்லது மகனாக கருதி இருப்பதாக நினைக்கிறேன்.

    மேலும் அவர் எனது உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #RahulGandhi #Kumaraswamy
    Next Story
    ×