search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசினார் வெங்கையா நாயுடு
    X

    மாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசினார் வெங்கையா நாயுடு

    மாநிலங்களவையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் சில வார்த்தைகளை வெங்கையா நாயுடு பேசினார். #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு 10 மொழிகளில் பேசினார். 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில், தமிழ் உள்பட 17 மொழிகளில் மட்டுமே ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கும் வசதி, முன்பு இருந்தது. அதாவது, இந்த மொழிகளில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம்.

    தற்போது, கூடுதலாக 5 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்தார். அப்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் சில வார்த்தைகள் பேசினார். இருப்பினும், மொழி பெயர்ப்பு வசதியைப் பெற உறுப்பினர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

    இதற்கு வரவேற்பு தெரிவித்த உறுப்பினர் சுப்பிரமணிய சாமி, சமஸ்கிருத வார்த்தைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
    Next Story
    ×