search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நாளை மோடி பிரசாரம்
    X

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நாளை மோடி பிரசாரம்

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி மேற்கு வங்காளம் மாநிலம், மிட்னப்பூர் பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார். #Moditoaddress #Midnaporerally
    கொல்கத்தா:

    பாராளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த 50 பொதுக்கூட்டங்கள் மூலமாக 100 முதல் 150 பாராளுமன்ற தொகுதிகளில் வாழும் வாக்காளர்களை கவர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலும் சில பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன,

    இதன் ஒருகட்டமாக நேற்றும் இன்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அசாம்கர், வாரணாசி, மிர்சாப்பூர் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ஷாஜஹான்பூர் பகுதியில் விரைவில் பேசவுள்ளார். 

    நாளை மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வருகைதரும் பிரதமர் மோடி, மிட்னப்பூர் மாவட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 2  எம்.பி.க்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் வெற்றிபெற மோடியின் பிரசாரம் கைகொடுக்கும் என அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து நாளை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் மிட்னப்பூர் வரும் மோடி, மிட்னப்பூர் கல்லூரி திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மோடியின் வருகையை முன்னிட்டு மிட்னப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Moditoaddress #Midnaporerally 
    Next Story
    ×