search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1.2 கோடி வசூல்
    X

    உ.பி. தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1.2 கோடி வசூல்

    உத்தரபிர தேசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. #NeetExam
    லக்னோ:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். இதனால் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் உத்தரபிர தேசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    லக்னோவில் ஒரா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 2018-2019 கல்வி ஆண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ சீட் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    முதல் ஆண்டு படிப்புக்கு ரூ.30 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுதி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரம் கட்டணமாக உள்ளது.

    இதுகுறித்து தனியார் மருத்துவ கல்லூரி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் வழங்க கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி மருத்துவ இடம் வழங்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில்தான் ரூ.1.2 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதுகுறித்து எய்ம்ஸ் டாக்டர்கள் சங்க தலைவர் ஹர்ஜித்சிங் கூறியதாவது:-

    முறைப்படுத்தப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளால் இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேரும் தகுதி சீர்குலைக்கப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமே டாக்டர்கள் ஆவார்கள் என்றால் அவர்களிடம் இருந்து சேவை மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது என்றார். #NeetExam
    Next Story
    ×