என் மலர்

  செய்திகள்

  ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை- தமிழக அரசு
  X

  ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை- தமிழக அரசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.
  சென்னை:

  ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு ஐகோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. 

  செவிலியர்கள் தரப்பில் தற்போது உள்ள ரூ.7 ஆயிரம் ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

  இன்று இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. மற்ற கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
  Next Story
  ×