search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வீச்சில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு - ராஜ்நாத் சிங்
    X

    கல்வீச்சில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு - ராஜ்நாத் சிங்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மிர் உள்ளரங்கு மைதானத்தில் சுமார் 6 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு. அதனால், தவறாக வழிநடத்தப்பட்டு கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.” என கூறினார்.

    காஷ்மீர் இளைஞர்கள் எதிர்காலத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். தனது இந்த பயணத்தில் காஷ்மீர் கவர்னர், முதல்வர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோரிடையும் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். வர உள்ள அமர்நாத் புனித யாத்திரைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×