search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா மாநிலம் உதயமான நான்காவது ஆண்டு தினம் - பிரதமர், துணை ஜனாதிபதி வாழ்த்து
    X

    தெலுங்கானா மாநிலம் உதயமான நான்காவது ஆண்டு தினம் - பிரதமர், துணை ஜனாதிபதி வாழ்த்து

    ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் உதயமான நான்காவது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Telangana4thanniversary
    புதுடெல்லி:

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 30-7-2013 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்தியாவின் 29-வது மாநிலமாக 2-6-2014 அன்று முதல் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் செயல்படத்தொடங்கியது. தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் தலைவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார். 

    வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேடக் மாவட்டங்களும் ஐதராபாத் நகரும் தெலுங்கானா மாநில ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளாக அமைந்துள்ளன.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் உதயமான நான்காவது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து முன்னேற்றப் பாதையில் செல்லும் மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்றாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்நாளில் தெலுங்கானா மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தெலுங்கானா மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கான மாநிலம் தொடர்பாக அங்கு வாழும் மக்களின் கனவுகளும், எதிர்பார்ப்பும் இனிவரும் ஆண்டுகளில் நிறைவேறட்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Telangana4thanniversary 
    Next Story
    ×