என் மலர்
செய்திகள்

X
ரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு: நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது குற்றப்பத்திரிகை
By
மாலை மலர்25 May 2018 4:47 AM IST (Updated: 25 May 2018 4:47 AM IST)

ரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #PNBCase #NiravModi #EDFile
மும்பை:
லட்சுமி விலாஸ் வங்கி அளித்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.
உத்தரவாத கடிதங்கள் மூலம், நிரவ் மோடி பெற்ற ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன்தொகையை அவர் வெளிநாட்டில் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த வழக்கில், அமலாக்கத்துறை நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது, 12 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை ஆகும்.
நிரவ் மோடி, அவருடைய தந்தை, சகோதரர், சகோதரி, மைத்துனர் உள்பட 24 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கோர்ட்டு விரைவில் ஆய்வு செய்யும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PNBCase #NiravModi #EDFile
Next Story
×
X