search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    11 வயது சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
    X

    11 வயது சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

    உத்தரக்காண்ட் மாநிலத்தில் தரமற்ற மதிய உணவு குறித்து புகார் அளித்த 11 வயது சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #DehradunBoy
    டேராடூன்:

    உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன்  மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ராகுல் என்ற சிறுவன் 5-ம் வகுப்பு பயின்று வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் ராகுல் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை நஷ்ரின் பனோவிடம் புகார் அளித்தார்.

    ராகுல் மீது கோபபட்ட நஷ்ரின் அவரை இரும்புக்கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராகுல் மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். ராகுலை அவன் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, ராகுலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் நஷ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #DehradunBoy
    Next Story
    ×