search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை
    X

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை

    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள் அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா. 

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 22-4-2010 அன்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியா தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களாக அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் மாதுரி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இவருக்கு எதிரான வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா(61) மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் மாதுரி குப்தாவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI 
    Next Story
    ×