என் மலர்

    செய்திகள்

    கஜுரோஹா - உதய்பூர் பயணிகள் ரெயில் இன்ஜினில் திடீர் தீ
    X

    கஜுரோஹா - உதய்பூர் பயணிகள் ரெயில் இன்ஜினில் திடீர் தீ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் சென்ற பயணிகள் ரெயிலின் இன்ஜினில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் கஜுரோஹாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு பயணிகள் ரெயில் இன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த ரெயில் ம.பி.யின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்பல்பூர் அருகே சென்றபோது ரெயில் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

    சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அந்த தடத்தில் போக்குவரத்து சிறிது பாதிப்பு ஏற்பட்டது. #Tamilnews
    Next Story
    ×