என் மலர்

  செய்திகள்

  மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்கினார் யோகி ஆதித்யநாத்
  X

  மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்கினார் யோகி ஆதித்யநாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். #CMYogi #exgratia #sandstormvictims
  லக்னோ:

  ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் புழுதி புயல் புரட்டி எடுத்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். உ.பி.யில் மட்டும் 65-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

  இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மணல் புயல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்.

  கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற யோகி ஆதித்யநாத், நேற்று மாலை உ.பி. திரும்பினார். இன்று காலை ஆக்ரா சென்ற முதல் மந்திரி மணல் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்.  மேலும், மணல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

  ஏற்கனவே, வடமாநிலங்களில் மணல் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CM #exgratia #sandstormvictims
  Next Story
  ×