என் மலர்

  செய்திகள்

  மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதராசா ஆசிரியர் கைது
  X

  மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதராசா ஆசிரியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மதராசா பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர். #hyderabad
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மதராசா பள்ளியில் சிறுவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியர் ரெகான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  மதராசா பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ரெகான் மதராசா பள்ளியில் அரபு மொழி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சிறுவர்களை மிரட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

  இந்நிலையில், இன்று ரெகானை போலீசார் கைது செய்தனர். அவரிடன் தொடர்ந்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #hyderabad
  Next Story
  ×