search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.2 .87 கோடிக்கு ஏலம்
    X

    திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.2 .87 கோடிக்கு ஏலம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடி ரூ.2.87 கோடிக்கு ஏலம் போனது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்தத் தலைமுடியை வாகனங்களில் ஏற்றி திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பதியில் காணிக்கை தலைமுடி சுத்தம் செய்து, நீளம், நிறத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

    அதன்படி நேற்று இ.டெண்டர் மூலம் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. அதில் 31 அங்குலத்துக்கு மேல் நீளமுள்ள முதல் ரக தலைமுடி கிலோ ரூ.22 ஆயிரத்து 494 வீதம், 8 ஆயிரத்து 700 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 400 கிலோ தலை முடி விற்பனையானது. அதன் மூலம் தேவஸ்தானத்துக்கு கிடைத்த வருமானம் ரூ.89 லட்சத்து 98 ஆயிரம்.

    16 அங்குலத்தில் இருந்து 30 அங்குலம் நீளமுள்ள 2-வது ரக தலைமுடி கிலோ ரூ.17 ஆயிரத்து 223 வீதம், 42 ஆயிரத்து 400 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 500 கிலோ விற்பனையானது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.86 லட்சத்து 12 ஆயிரம்.

    10 அங்குலத்தில் இருந்து 15 அங்குலம் நீளமுள்ள 3-வது ரக தலைமுடி கிலோ ரூ.3 ஆயிரத்து 14 வீதம், 2 ஆயிரத்து 400 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 100 கிலோ விற்பனையானது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.63 லட்சத்து 29 ஆயிரம்.

    5 அங்குலத்தில் இருந்து 9 அங்குலம் நீளமுள்ள 4-வது ரக தலைமுடி 600 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ கூட ஏலத்தில் போகவில்லை.

    5 அங்குலம் நீளமுள்ள 5-வது ரக தலைமுடி கிலோ ரூ.36 வீதம், 14 ஆயிரத்து 200 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 10 ஆயிரம் கிலோ விற்பனையானது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்.

    வெள்ளை நிறத்திலான தலைமுடி கிலோ ரூ.5 ஆயிரத்து 462 வீதம், 6 ஆயிரம் கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 800 கிலோ விற்பனையானது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.43 லட்சத்து 70 ஆயிரம். ஆக மொத்தம் 13 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சத்துக்கு ஏலம் போனதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். #Tirupati
    Next Story
    ×