என் மலர்
செய்திகள்

மகராஷ்டிராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
மகராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை:
மகராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் உள்ள சப்த்ஷ்ருங்கி தேவிகார்க் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குஜராத்தின் நவ்சாரி மற்றும் சூரத் மாவட்டத்தில் இருந்து சிலர் ஒரு பேருந்தில் பக்தி சுற்றுலா வந்தனர். அவர்கள் கேதாரி காட் பகுதியில் உள்ள போர்கவுன் - நானாஷி சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு 8 வயது சிறுமி உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story