என் மலர்

  செய்திகள்

  மலக்குடலில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்- சென்னை பயணி கைது
  X

  மலக்குடலில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்- சென்னை பயணி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலக்குடலில் மறைத்து 1.3 கிலோ தங்கத்தை சென்னைக்கு கடத்த முயன்ற பயணி இம்பால் விமான நிலையத்தில் சிக்கினார். #ImphalAirport #GoldSmuggling
  இம்பால்:

  மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில் பயணிகளிடம் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னைக்கு புறப்பட இருந்த செந்தில் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர், அவரிடம் விசாரணை நடத்தி அவரை சோதனையிட்டனர்.

  அப்போது அவர் மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 1.3 கிலோ அளவிலான தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலில் இருந்த தங்கத்தை அகற்ற பறிமுதல் செய்தனர். செந்திலை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  தங்கம் கடத்தலில் செந்தில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் கடத்த முயன்ற தங்கத்தின் மதிப்பு ரூ.41.23 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ImphalAirport #GoldSmuggling
  Next Story
  ×