என் மலர்
செய்திகள்

பழுப்பாக இருந்து பச்சையாக மாறிய தாஜ் மஹால் - சுப்ரீம் கோர்ட் வேதனை
வெண்ணிற பளிங்கு மாளிகையாக கம்பீரமாக உயர்ந்து நின்ற தாஜ் மஹால் பழுப்பாக இருந்து, தற்போது பச்சை மற்றும் அடர்சிவப்பாக மாறியது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #SCconcern #changeincolour #TajMahal
புதுடெல்லி:
உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.
உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.
இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாஜ்மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியபோது, தாஜ் மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.
தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது, இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ் மஹால் எப்படியாவது போகட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?
அப்படி, உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள நிபுணர்கள் அல்லது வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #SCconcern #changeincolour #TajMahal

Next Story