என் மலர்

  செய்திகள்

  பேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை
  X

  பேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பேரன் இறந்த சோகத்தில் பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #kolkata
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பாஸ்கர் சர்தார் (17) நேற்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது போனில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் போட்டுக்கொண்டே பாஸ்கர் பேசினார். திடீரென செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாஸ்கரின் இழப்பு அவரது பாட்டி சரளா சர்தார் (64) மிகுதியாக தாக்கியது. அவர் துக்கத்தில் மூழ்கினார். பாஸ்கர் இறந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்த நிலையில் அவரது பாட்டி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் அன்பை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. #kolkata #tamilnews

  Next Story
  ×