என் மலர்

  செய்திகள்

  பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் - டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
  X

  பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் - டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பயிற்சி மருத்துவரை தாக்கியதை தொடர்ந்து அனைத்து பயிற்சி மருத்துவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #AIIMS #NewDelhi #doctorsstrike
  புதுடெல்லி:

  டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் அதுல் குமார் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை
  அவருக்கு கீழ் பணிபுரியும் பயிற்சி மருத்துவரை மற்ற டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் முன்னிலையில் அடித்தாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், டாக்டர் அதுல் தனது தவறை உணர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டார்.

  ஆனால், டாக்டர் அதுலை மருத்துவமனையிலிருந்து நீக்க வேண்டும் என மற்ற பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுவரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் நேற்று இரவிலிருந்து ஈடுபட்டு வருகின்றனர். அவரச சிகிச்சை பிரிவுகளில் மட்டுமே பணிபுரிவோம். மற்ற பிரிவுகளில் பணிபுரிய மாட்டோம் என கூறினர்.  இதுகுறித்து மருத்துவமனை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், 'டாக்டர் அதுலின் செயல் கண்டனத்திற்கு உரியது. இது போன்றவர்களின் செயல் ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையேயான உறவை கலங்கப்படுத்துகிறது. இவரால் எந்த ஒரு துறையையும் தலைமைப்பொறுப்பில் இருந்து நடத்த முடியாது. அதனால் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர். மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  #AIIMS #NewDelhi #doctorsstrike

  Next Story
  ×